Thursday, November 17, 2011

ரூம் போடுங்க ப்ளீஸ்!

இது நான் அமெரிக்காவில் பல வருடங்களுக்கு முன் இருந்தபொழுது நடந்தது. அப்ப நான் அமெரிக்காவுக்கு புதுசு.ஒரு நாள் அருகில் இருந்த மாலில் சுத்திப் பாத்துக்கொண்டிருந்தப்ப , அங்க ஒரு சூப்பர் கார் ஒன்ன நிறுத்தி வச்சுர்ந்தாங்க.


"என்னடா இது ,மாலுக்குள்ள கார் இருக்கேன்னு" , கிட்டப் போயி பார்த்தேன். அதுக்கு பக்கத்துல நெறைய பார்முங்க  இருந்துச்சு. வெள்ளைக்காரனுங்க அந்த பார்ம எடுத்து 'கட கடன்னு' என்னத்தையோ எழுதி பக்கத்தில இருந்த பெட்டியில போட்டுட்டு கார ஒரு தடவ ஏக்கத்தோட பாத்துட்டு போய்கிட்டே இருந்தானுங்க.

நானும் அந்த பார்ம எடுத்துப் பார்த்தேன் ,  'நீங்கள் இந்த காரை வெல்ல வேண்டுமா , உங்கள் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை பூர்த்தி செய்து , பக்கிதில் உள்ள பெட்டியில் போடுங்கள், நீங்கள் வெற்றி பெற்றால் , இந்த கார் உங்களுக்கே சொந்தம் ' என்று போட்டுருந்துச்சு.

'ஆசை யாரை விட்டது, நாமளும் போடுவோம் , காசா பணமா , சும்மா நம்ம அட்ரஸ் தான' அப்படின்னு நானும் எங்க குல தெய்வத்தையெல்லாம் வேண்டிக்கிட்டு , நம்ம திருவிளையாடல் தருமி மாதிரி , 'இந்த கார் எனக்கே ,எனக்கே பரிசு விழனும்டா எங்கப்பா'  என்று பய பக்தியுடன் அந்த பெட்டியில் தள்ளிவிட்டுட்டு ,  நானும் அந்த வெள்ளக் காரனுகள மாதிரியே பெருசா மூச்சுவிட்டுட்டு, காரையே திரும்பி திரும்பி பாத்துக்கிட்டே போனேன்.

அப்புறம் வேலை பிசியில  அதப் பத்தி சுத்தமா மறந்துட்டேன். ஒரு வாரம் கழிச்சு ,வீட்டுக்கு ஒரு கடுதாசி வந்துச்சு. 'அய்யா வாழ்த்துக்கள் , உங்களுக்கு ஆயிரம் அமெரிக்க டாலர் மதிப்புடைய வவுச்சர் அனுப்பி உள்ளோம்,அதை வைத்து எங்கள் ரிசார்ட்டில் மூன்று இரவுகள் நீங்கள் தங்கிக் கொள்ளலாம். நீங்கள் செய்யவேண்டியது , இந்த முகவரிக்கு வந்து உங்கள் பரிசினை உறுதிப் படுத்திக்கொள்ளவும்' அப்படின்னு போட்டுருந்துச்சு.


'சரி கார் தான் கிடைக்கல,போய் அங்க தங்குறத உறுதிப் படுதுவோமின்னு' ,ஒரு சனிகிழமை நம்ம 'ஓட்டைக்காரை' ஓட்டிட்டு அங்க போயி சேந்தோம்.
அவங்க கொடுத்த அட்ரசுல ,ஒரு பெரிய காம்பவுண்டு சுவர் , அதுக்குள்ள அழகா பல சின்ன சின்ன பங்களாக்கள் கட்டப்பட்டுகிட்டு இருந்துச்சு.'ஆகா சூப்பரா இருக்கே,பரவாயில்ல மிஸ் பண்ணாம வந்துட்டோம் ' அப்படின்னு மனசுல நெனைசிகிட்டேஉள்ள போயி , அங்க இருந்த வெள்ளைகாரி ஒருத்திகிட்ட விவரத்தசொன்னோம். 'அப்பிடியா,வாங்க வாங்க ,உங்களதைதான் எதிர்பார்த்துகிட்டு இருக்கோம், சீக்கிரம் உள்ள போங்க ' அப்பிடின்னு உள்ள கை காட்டி வழி சொன்னாங்க.

'டவுன் பஸ்ல சீட்டு பிடிக்கறதுக்கு  முண்டி அடிச்சி ஓடிப் போயி ஏறுவானுங்க ' பாருங்க , அது மாதிரி முண்டி அடிசிக்கிட்டி உள்ள ஓடினோம். உள்ள போயி பாத்தா, ஒரு பெரிய ஹால்.  அதுல பலூன்லாம் கட்டி ,ஏதோ பிறந்த நாள் கொண்டாடுற மாதிரி அலங்காரம் பண்ணியிருந்தாங்க.

'என்னடா இது' ,அப்படின்னு சுத்தி முத்தி பாத்தாக்க ,முக்காவாசி வெள்ளைக்காரனுங்க கிட்ட ,நம்ம கைல இருந்த மாதிரியே அந்த கடுதாசி.

அப்ப திடீருன்னு ஒரு கோட்டு சூட்டு போட்ட வெள்ளைக்காரன் ஒருத்தன் மைக்கவச்சி 'பர பரன்னு' என்னமோ பேசினான். நம்ம அப்பதான் கொஞ்சம் கொஞ்சமா அவனுக பேசுற இங்கிலீஷ் புரிஞ்சிகிட்டு இருந்த ஆரம்ப கட்டமா , சத்தியமா அவன் என்ன சொன்னான்னே புரியல.ஆனா எல்லாம் கை தட்டுனானுங்க. விசில் வேற அடிச்சானுங்க.திடீர்னு ஒருத்தன் சாம்பைன் பாட்டில் வேற ஓபன் பண்ணி பீச்சி அடிச்சான் .

நாங்க ஒண்ணுமே புரியாம , காணாம போயிட்ட ஆடு மாதிரி ,'பேந்த பேந்த ' முழிசிகிட்டே கையத் தட்டி வச்சோம். திடீர்னு அங்க இருந்த கோட்டு சூட்டு போட்டவனுங்க , கடுதாசி வச்சுர்ந்தவங்கள ஆளுக்கொண்ணா தள்ளிகிட்டு போனானுங்க.

நம்மளப் பாத்தும் ஒருத்தன் வந்தான். 'அய்யா பரிசு வாங்க வந்தயா' அப்படின்னு கேட்டான். 'ஆமாயா ,ஆமா ,எங்க எங்க ,கொடு சீக்கிரம் 'அப்படின்னு அவன்கிட்ட கேட்டோம். 'இருக்கு,ஆனா அத தர்றதுக்கு முன்னாடி ,நாங்க உங்களுக்கு எங்க கம்பனியப் பத்தி பேசுவோம் ,ஒரு ஒன் ஹவர் ஆகும்,ஓகேவா?" அப்பிடின்னு கேட்டான்.

'ஓஹ் எஸ், தாராளமா பேசு கண்ணு ,ஆனா கண்டிப்பா பரிசு உண்டுல்ல?"
"எஸ் எஸ் " அப்படின்னுட்டு ,எங்களையும் ஒரு ரூமுக்கு தள்ளிட்டு போனான் அந்த வெள்ளையன்.

ரூமுக்குள்ள வச்சு எங்க கிட்ட பேச  ஆரம்பிச்சான்.
  "நீங்க எப்படி வந்தீங்க?" - அவன்
  "கார்ல வந்தோம்"
  "என்டரன்ஸ்ல நுழையுரப்ப என்ன பாத்தீங்க"
  "அழகான வீடுங்க,பங்களாக்கள்"
  "அதுல நீங்க தங்கனுமின்னு ஆசையா இருக்கா?"
  "அடப் பாவி ,அதுக்குதாண்டா நூறு மைல் ,அவசர அவசரமா லொங்கு லொங்குன்னு கார ஒட்டி வந்து சேந்தோம்"
  "சரி,நீங்க இங்கப் பாக்குற வீடு மட்டுமில்ல , நாங்க உலகத்துல பல இடங்கள்ள இந்த மாதிரி வீடு கட்டி வச்சுர்க்கோம், பாருங்க "

அப்பிடின்னுட்டு ஒரு பைல் முழுசும் வித விதமா போட்டோ காமிச்சான்.
நாங்க ஆன்னு வாய் பிழந்து பாகுரதப் பாத்துகிட்டே,
"ஒன்னும் சொல்லட்டுமா,நீங்க நினச்சா ,நீங்களும் இதுக்கு ஓனர் ஆகலாம்" அப்படின்னு மறுபடியும் ஆரம்பிச்சான்.

நாங்க பர பரப்ப ,'எப்படி சொல்லு சொல்லு' ன்னு ஆர்வமானோம்.
'ஒன்னும் இல்ல ,அது ரொம்ப ஈசி ,  இதுக்கு பேரு டைம் ஷேர் ஹௌசிங் ரிசார்ட்ஸ், நீங்க பணம் கட்டுநீங்கன்ன , வருசத்துல நாலஞ்சு வாட்டி நீங்க இந்த வீட்டை உங்க விடுமுறைக் காலங்கள்ல என்ஜாய் பண்ணிக்கலாம், நாங்க உங்களுக்காக இந்த மாதிரி வீடுங்கள எல்லா வசதியோடவும் கட்டி ,
அதன் பராமரிப்ப பாத்துகிடுவோம்,நீங்க ஜாலியாவந்து என்ஜாய் பண்ணிட்டு போகலாம்"   அப்பிடின்னான்.
"ஆஹா ,நல்ல ஸ்கீமா இருக்கே ,எவ்வளவு ஆகும்?" கேட்டோம்.
"அதிகமில்லை" அப்ப்டின்னிட்டு பல ஆயிரம் டாலர் சொன்னான்.
"அய்யா ,நாங்க இப்பதான் அமெரிக்காவுக்குள்ள நுழைந்சிருக்கோம், எங்க கிட்ட அவ்வளவு காசு இல்ல சாமி'  சொன்னோம்,
"கவலைப்பாடாதீங்க ,நீங்க கொஞ்சம் கொஞ்சமா ,இன்ஸ்டால்மென்ட் கட்டிடுங்க" அசராம அடிச்சான் அவன்.

நாங்க பலமான யோசனையைப் போட்டுட்டு, 'இல்லையா ,வந்து,போயி,நாங்க அப்புறம் சொல்றமே' ன்னோம். அவன் மூஞ்சி கொஞ்சம் கோணலாப் போச்சி.'சரி இது தேறாத கேசு' அப்படின்னுட்டு , 'கைய' குலுக்க ஆரம்பிச்சான்.
'அய்யா இந்த வவுச்சர்' அப்படின்னோம் நாங்க விடாம , நாங்க யாரு , விடாக்கண்டன் ஆச்சே. 'வாசல்ல ஒரு அம்மாவைப் பாதீங்கல்ல, அவ கிட்ட போயி கேளு' அப்படின்னுட்டு வேற கிராக்கி பிடிக்க ஓடிட்டான் அந்த பொறம்போக்கு.

நாங்க , மீண்டும் அந்த வெள்ளைகாரியிடம் போயி ,'அம்மா எங்களுக்கு ரூம் போடுங்கம்மா, இந்த வவுச்சர்ல சொன்னபடி' அப்படின்னோம். 'oh டேட்டு சொல்லுங்க ' அப்படின்னாங்க. 'இவுங்க ரொம்ப நல்லவுங்கடா' அப்பிடின்னு நெனைசிகிட்டே , ஒரு நீண்ட வார இறுதி விடுமுறை வர்றமாதிரி ஒரு டேட்டப் பாத்து சொன்னோம். அந்தம்மா சிரிச்சுகிட்டே, 'சாரி சார் ,அது பிளாக் அவுட் டேட்டு' ,அந்த நாள்ல தங்கனும்னா , நீங்க 500$ கட்டனும் எக்ஸ்ட்ராவா' அப்படின்னு ஒரு குண்ட தூக்கிப் போட்டா.

"அட இப்படி வேற ரூல் ஆம்மா, சரி இந்த டேட்டுக்கு போடும்மா'  அப்பிடின்னு இன்னொரு தேதியைக் குடுத்தோம். அந்தம்மா ரொம்ப சீரியஸா அவங்க நோட்ல என்னத்தையோ பாத்துட்டு,

   "சார் ,நீங்க அதிர்ஷ்ட சாலி , அந்த தேதி காலியா இருக்கு, புக் பண்ணட்டுமா'
   "போடுங்க,போடுங்க ,அதுக்குதான இந்த அக்கப் போர் உன்கூட"
  "சார் , ஆனால் நீங்க ஒரு 300$ டாலர் பணம் குடுங்க இப்ப ,செக் கூட வாங்கிப்போம் "
  "அடடா ,மறுபடியுமா ,எதுக்கும்மா 300$, அதான் வவுச்சர் வச்ருக்கமே"
"சார் அந்த வவுச்சர் , basic rate மட்டும் தான் கவர்பன்னும் , நாங்க அங்க குடுக்கப் போற சர்வீசு ,அப்புறம் மெயிண்டனன்சு சார்ஜு ,அதுக்கு இதுக்கு ,அதான் சார் அந்த முன்னூறு"

வந்துச்சு கோபம், என்ன பண்றது ,வெள்ளைக் காரி கிட்ட நம்ம கோபத்தைக் காட்ட முடியுமா , 'போங்கடி நீங்களும் உங்க வவுச்சரும்"   அப்படின்னு மனசுக்குள்ள திட்டிகிட்டே , வந்த வழியப் போனோம்.


அப்புறம் தான் தெரிஞ்சுது ,நம்ம ஆளுக நெறையப் பேரு ,இந்த மாதிரி போயி பல்பு வாங்கிட்டு வந்துர்காயீங்கன்னு.  ஒரு நண்பன் சொன்னான், 'அமெரிக்காவுல உன் போன் நம்பர பிடிங்குரதுக்க்னே நெறைய மாய்மாலம் பன்னுவாயீங்க. உன் போன் நம்பர பல விளம்பரம் செய்ற ஏஜென்சிக்கு வித்துடுவாயீங்க, அதுனால இனிமே சும்மா உன் நம்பரையோ ,அட்ரசையோ கண்ட கண்ட இடத்துல கொடுத்து வைக்காத அப்படின்னான்.

அதுக்கப்புறம் கொஞ்ச நாளைக்கி உனக்கு அந்த பரிசு விழுந்துருக்கு அப்படி இப்படின்னு ஒரே கடுதாசியா வரும் எதுவும் கண்டுகிறது இல்லை.

இந்த விஷயம் அப்புறம் இந்தியாவுல கூட வந்துச்சு ,எனக்கு தெரிஞ்சவுங்க ஏதோ ஒரு வடநாட்டுல ரிசாடு கட்டுறாங்கன்னு ,பணம் கட்டி ஏமாந்து இருக்காங்க . இதே ஸ்கீம்ல , தேக்கு மரம் வச்சு ,நாங்க உங்களைப் பணக்காரன் ஆகுரோமின்னு கூட கொஞ்ச வருஷம் முந்தி நல்ல கல்லா கட்டுனது நினைவிற்கு வந்து போகுது.

இப்ப சில வருசத்துக்கு முன்ன ,பெங்களூருல அதே மாதிரி ஒருத்தன்
கிளப் மகேந்திரா ரிசார்ட்டு ன்னு ஆரம்பிச்சி சக்கப் போடு போட்டுக்கிட்டுருந்தாப்ல.

ஆள் பார்க்க ஒரு மார்க்கமா இருப்பாப்ல, இவரு நல்லவரா , கெட்டவரா , எனக்கு அனுபவம் இல்ல,தெரிஞ்சவுங்க சொல்லுங்க. தலைவரு நல்லா சம்பாரிச்சு ,சொந்த ஹெலிகாப்டர் கூட வச்ருக்கதா எங்கயோ படிச்சா நினைவு.


டிஸ்கி: சரி மாலுகுள்ள கார் படம் போடலாமின்னு கூகிள் கிட்ட சொல்லி தேடினா ,இந்த லிங்க் கிடைச்சிச்சி, நமக்கு நடந்தது ஒரு பத்து ,பன்னெண்டு வருசத்துக்கு முந்தி, ஆனா இந்த லிங்குல உள்ள மிச்சவுங்க அனுபவத்தைப் படிச்சிப் பாத்தா,இப்பயும் கூட அதே கூத்து நடக்குது போல, டைம் கிடைச்சா மேஞ்சு பாருங்க  http://www.knowledgesutra.com/discuss/tsfitd-car-giveaway-malls.om



4 comments:

  1. நாம எவ்வளவு உறுதியா இருந்தாலும், சில நேரத்துல இது மாதிரி விஷயங்களில் ஏமாந்து போய்டுவோம்.
    இது மாதிரி சில அனுபவம் தான் நமக்கு படம். இது மாதிரி விஷயங்களை பகிர்வதினால் மற்றவர்கள் ஏமாந்து போகாமல் இருப்பார்கள்.

    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. @Arun J Prakash
    ஆமாம் ..நன்றிக்கு நன்றி.

    ReplyDelete
  3. அமெரிக்காவில் மட்டும் இல்லை. லண்டனிலும் இந்த தில்லுமுல்லு இருக்கு. நம்பரைக் கொடுத்தீங்கன்னா அப்புறம் வீட்டுக்கு பாய்லர் மாத்திரவன் முதல் டாய்லட் கழுவுறவன் வரை கொடைஞ்சு எடுத்துடுவானுங்க...

    ReplyDelete
  4. // ரூம் போடுங்க ப்ளீஸ்!

    தலைப்பை பார்த்துட்டு ஓடி வந்தேன்...
    வேற மேட்டரா...

    இப்படி கூட ஆட்டய போடறாங்களா...

    ReplyDelete

படித்தது பிடித்தால் நண்பர்களுக்கு என் பதிவை, மறக்காமல் ,மறக்காமல் அறிமுக படுத்துங்கள்,அப்படியே ,எனக்கும் உங்கள் முத்தை உதிர்த்து விட்டு சென்றால் நானும் பதிவுலகில் பணக்காரன் ஆவேன் உங்கள் தயவில் :-)