Tuesday, February 18, 2014

சொன்னது நடந்தது!

நான் சென்ற 'குனிஞ்சா டாலர் நட்டம்' என்ற பதிவில் , ஒரு பொது விழிப்புணர்வு எச்சரிக்கையை விட்டிருந்தேன். நான் சொன்ன மாதிரியே, பாவம் ஒரு பால்காரர் , பத்து ரூபாய்க்கு ஆசைப் பட்டு , தான் வங்கியில் இருந்து எடுத்து வந்த பணத்தை இழந்து விட்டாராம் பாவம்.

இன்னொரு வழக்கமான ட்ரிக் யூஸ் பண்ணுவது, "சார் / மேடம் உங்கள் சட்டையில் ஏதோ ஒட்டி இருக்கிறது " என்று கவனத்தை திசை திருப்பி கொள்ளை அடிப்பது.  மற்றொரு ட்ரிக் , "போலிஸ் போல் வேடம் பூண்டு பைக்கில் வந்து , பெண்ணிடம்  நகையை பத்திரமாக வைத்துக் கொள்ள அறிவுறுத்தி , அதனை பாதுகாப்பாக  பேப்பரில்  சுருட்டி தருவதாகச் சொல்லி தந்து விட்டு  செல்வது , நகை உரிமையாளர் பின் வீட்டில் சென்று அந்த பேப்பரை விரித்து பார்த்தால் , நகை கோவிந்தா , கோவிந்தா ஆவது .

அடிப்படையில்  மாஜிக் நிபுணர்கள் செய்வது தான் , "உங்கள் கவனத்தை திசை திருப்பி , நொடியில் தாங்கள் எண்ணியதை முடிப்பது".    தேவையில்லாமல் ஒருத்தர் உங்களுக்கு உதவ வந்தால் - முக்கியமாக நீங்கள் அதிக பணம் கையில் வைத்திருக்கும் பொழுது , பணத்தின் மீது கவனம் வைத்து , உரிய இடத்தில சேரும் வரை கவனத்தை திசை திருப்பாமல் இருப்பது தான் ஒரே வழி.


தினமணியில் வந்த செய்தி இது :

பத்து ரூபாய்த்தாளுக்கு ஆசைப்பட்டு ரூ.1 லட்சத்தை இழந்தார் பால்காரர்

First Published : 18 February 2014 08:57 PM IST
மதுரை அருகே வங்கியில் பணம் எடுத்துவந்த பால்காரரிடம் பத்து ரூபாய்த்தாளை காட்டிய மர்மநபர் அவர் பையிலிருந்த ரூ.1 லட்சத்தை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டார்.
  மதுரை மாவட்டம் திண்டியூரைச் சேர்ந்தவர் ராஜு. பால்காரர். இவர் கருப்பாயூரணியில் உள்ள பொதுத்துறை வங்கியில் சேமிப்புக்கணக்கு வைத்துள்ளார். வங்கிக்கு செவ்வாய்க்கிழமை காலை மோட்டார் சைக்கிளில் வந்த ராஜு தனது சேமிப்பிலிருந்து ரூ.1.05 லட்சம் எடுத்துள்ளார். பணத்தை மஞ்சள்பையில் வைத்துக்கொண்டு வெளியே வந்தவர் மோட்டார் சைக்கிள் கேன்பாரில் மாட்டியுள்ளார்.
 அப்போது சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் வந்து கீழே பத்து ரூபாய்த்தாள்கள் சிதறிக்கிடப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார். உடனே பணப்பையை விட்டுவிட்டு சிதறிக்கிடந்த பத்துரூபாய்த்தாள்களை ராஜு எடுத்துள்ளார்
  அவர் பத்து ரூபாய்த்தாள்களை எடுத்து நிமிரும்போது மஞ்சள்பையில் இருந்த பணத்தை எடுத்த மர்மநபர் அருகே மோட்டார் சைக்கிளில் தயாராக இருந்த 2 பேருடன் சேர்ந்து வேகமாகச் சென்றுவிட்டார்.
  இதனால் அதிர்ச்சிóயடைந்த ராஜு தனது பையைப் பார்த்தபோது அதில் ரூ.5 ஆயிரம் மட்டுமே எஞ்சியிருந்தது. நூதனமுறையில் தன்னை ஏமாற்றிய மர்மநபர்கள் ரூ.1 லட்சத்தை திருடிச்சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து ராஜு அளித்த புகாரின் பேரில் கருப்பாயூரணிப் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனர்.

1 comment:

  1. நம் மக்கள் திருந்தவே மாட்டார்கள்.

    ReplyDelete

படித்தது பிடித்தால் நண்பர்களுக்கு என் பதிவை, மறக்காமல் ,மறக்காமல் அறிமுக படுத்துங்கள்,அப்படியே ,எனக்கும் உங்கள் முத்தை உதிர்த்து விட்டு சென்றால் நானும் பதிவுலகில் பணக்காரன் ஆவேன் உங்கள் தயவில் :-)